விபத்து மரண நிதி உதவித்தொகை


விபத்து மரணம் உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை கோரும் விண்ணப்பம்

தொழிலாளர் விபத்தினால் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு விபத்துமரண உதவித்தொகையாக ரூ.2,00,000/-ம் ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.5,000/-வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • விபத்தில் இறந்த தொழிலாளி தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • இறப்பு சான்றிதழ் நகல்.
  • பிரேத பரிசோதனை சான்றிதழ் (PMR) மருத்துவரிடம் சான்றொப்பம் பெறவும்.
  • வாரிசுதாரர் சான்றிதழ் நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தடையில்லா சான்றிதழ் ரூ.20/- பத்திர தாளில் Notary Public-யிடமிருந்து பெறவும் (NOC)
  • முதல் தகவல் அறிக்கை (FIR) காவல் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெறவும்.
  • வாரிசுதாரர் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்) - 2 நகல்.
  • இறந்தவரின் முன் மாத சம்பளச் சான்றிதழ்.
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது (நகல்)
  • தொழிலாளர் நல நிதி செலுத்திய பெயர் பட்டியல் மற்றும் தொழிலாளர் நல நிதி ரூ,10/- பிடித்தம் செய்யப்பட்ட சம்பள இரசீது.
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.
  • குறிப்பு : மரணமடைந்த ஒரு வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    பதிவிறக்க