கண்கண்ணாடி உதவி தொகை
தொழிலாளர்கள் மூக்கு கண்ணாடி வாங்கியதற்கான தொகையை மீளப் பெறுவதற்கான விண்ணப்பம்
மருத்துவச் சான்று மற்றும் ரொக்க பட்டியலின் பேரில் தொழிலாளர்கள் மூக்குக் கண்ணாடி வாங்கியமைக்காக ரூ.1000/- வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.
உதவி பெறுவதற்கு தகுதிகள்
- தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
- தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
- தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்
- மருத்துவ பரிசோதனை இரசீது.
- கண்ணாடி வாங்கிய இரசீது.
- குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்.
- தொழிலாளர் நல நிதி செலுத்திய பெயர் பட்டியல் மற்றும் தொழிலாளர் நல நிதி ரூ,10/- பிடித்தம் செய்யப்பட்ட சம்பள இரசீது.
- தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
- வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.