உயர்க்கல்வி (பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு)
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மனு
| 1 | பொறியியல்பட்ட மேற்படிப்பு | Rs.12,000 |
| 2 | மருத்துவபட்ட மேற்படிப்பு | |
| 3 | சட்டபட்ட மேற்படிப்பு | |
| 4 | விவசாயபட்ட மேற்படிப்பு | |
| 5 | ஆசிரியர் பயிற்சிபட்ட மேற்படிப்பு | |
| 6 | உடற்பயிற்சிகல்வி பட்ட மேற்படிப்பு | |
| 7 | பொறியியல் பட்டப்படிப்பு | Rs.8,000 |
| 8 | மருத்துவ பட்டப்படிப்பு | |
| 9 | சட்டப் பட்டப்படிப்பு | |
| 10 | விவசாய படிப்பு | |
| 11 | ஆசிரியர் பயிற்சிபட்டப்படிப்பு | |
| 12 | உடற்பயிற்சிகல்வி பட்டப்படிப்பு | |
| 13 | பொறியியல்பட்டயப்படிப்பு | Rs.5,000 |
| 14 | மருத்துவப் பட்டயப்படிப்பு | |
| 15 | ஆசிரியர் பயிற்சிபட்டயப்படிப்பு | |
| 16 | உடற்பயிற்சிகல்விபட்டயப்படிப்பு | |
| 17 | மேல்நிலைக் கல்வி | Rs.4,000 |
| 18 | தொழிற்பயிற்சிக் கல்வி | Rs.4,000 |
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவி பெறுவதற்கு தகுதிகள்
- தொழிலாளர் நலநிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
- தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
- தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.
மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்
- தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
- மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
- தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது நகல்.
- ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
- வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.
குறிப்பு : வருடந்தோறும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31.